கைகால்களைக் கட்டி கதற கதற அறுவை சிகிச்சையை மேற்கொண்ட காலத்தில் நோயாளிகளின் கதறல் சத்தத்தைக் கேட்டு வருந்திய 'சர் ஜேம்ஸ் சிம்சன்' அவர்கள், தனது 18 வயதிலேயே அறுவை சிகிச்சை நிபுணரானவர்... குளோரோஃபார்ம் எனும் மயக்க மருந்தினைக் கண்டுபிடித்தார். அதனை முதன்முதலாக ஒரு பிரசவ ஸ்திரீக்கு செலுத்தவும் அவள் வலியின்றி பிள்ளை பெற்று அந்த சந்தோஷத்தின் மிகுதியினால் அனஸ்தீஷியா என்றாளாம். எனவே அந்த பெயர் இன்றளவும் வழங்குகிறது. இத்தகைய சாதனையை செய்திட்ட ஜேம்ஸ் சிம்ஸன் தன் சொந்த மகளையே கொடிய வியாதிக்கு பலிகொடுத்த துக்கத்தின் மிகுதியினால் சோர்ந்திருந்த நேரத்தில் சிலுவையின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டார். மருத்துவத்தின் அரிய சாதனைகள் பலவும் ஆற்றிய அவரிடம் ஒருமுறை இவ்வாறு கேட்கப்பட்டது, 'உங்கள் கண்டுபிடிப்புகளில் சிறந்ததாக எதை நினைக்கிறீர்கள்' என்பதாக. அவர் சொன்னது, "என்னை நேசிக்கும் இரட்சகரை நான் கண்டுபிடித்ததே பெரும் சாதனை" என்றாராம். இன்றைக்கு மதபேதமின்றி உலகத்தார் பயன்படுத்தும் அரும்பொருளான அனஸ்தீஷியா எனப்படும் குளோரோஃபார்ம் மருந்தை கண்டுபிடித்தவர் கர்த்தருக்கு அஞ்சி நடந்த ஒரு தூயமனிதர் என்ற தகவல் நம்மை உற்சாகப்படுத்தட்டும்...!!!
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார். பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. அப்போது, அவர் கண் முன்னால், பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின.பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெஷின் இருந்தால் எப்படி இருக்கு...
கருத்துகள்
கருத்துரையிடுக