1910ம் ஆண்டு கேரளாவில் ஹேட் என்ற ஆங்கிலேயரால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. 110 ஆண்டுகளுக்கு முன்னர் புலையர் இன மக்கள் தங்களுக்குத் தேவையான பொருளை நேரடியாக கடைக்குள் சென்று வாங்க முடியாது. கடைக்கு எதிரே சாலையின் மறுபுறம் காசை வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டும். அந்தக் காசை ஒருவர் பெற்று கழுவி கடையில் தருவார். அவருக்குத் தேவையான பொருளை கடைக்காரர் ஒரு இலையில் கட்டி வீசி எறிவார். இது தான் நடைமுறை. தவறி யாரேனும் கடை அருகில் சென்றுவிட்டால் கட்டிவைத்து அடிப்பார்களாம். அப்படி இருந்த நிலையை இந்த புகைப்படம் நமக்கு ஆவணமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார். பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. அப்போது, அவர் கண் முன்னால், பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின.பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெஷின் இருந்தால் எப்படி இருக்கு...
கருத்துகள்
கருத்துரையிடுக